கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழக்கும் பௌத்தர்கள் தமது உறவினரின் உடலங்களை புதைப்பதற்கான அனுமதி கோரினால் அதனையும் அரசு பரிசீலிக்கும் என தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதிப்பதற்கு அமைச்சரவையில் எதிர்ப்பேதும் இல்லையென அவர் தெரிவித்த நிலையில், அவரிடம் வினவப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எனினும், சுகாதார அதிகாரிகளே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment