ஹரினின் PCR பரிசோதனை: ஆளுங்கட்சி அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 October 2020

ஹரினின் PCR பரிசோதனை: ஆளுங்கட்சி அதிருப்தி

 


சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தாம் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ளதாக வெளியிட்டுள்ள தகவலையடுத்து அவர் அவ்வாறு செய்யக் காரணம் என்ன? உடனடியாக தனிமைப்பட வேண்டும் என ஆளுங்கட்சி சார்பில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.


இது குறித்து சபையில் பேசிய ஆளுங்கட்சி உறுப்பினர் பிறேமலால் தொலவத்த, ஹரின் கட்டாயம் தனிமைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


எனினும், மற்றவர்களுக்கு வைரசை பரப்புவதை விட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னைப் போல பாதுகாப்புக்காக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தனியார் வைத்தியசாலைகளிலும் தற்போது இவ்வசதி இருப்பதாகவும் ஹரின் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்குது.

No comments:

Post a Comment