கம்பஹா: சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 October 2020

கம்பஹா: சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று!

 


மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்படும் நபர்களுக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கம்பஹா வைத்தியசாலை மருத்துவர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கம்பஹா, உடுகம்பொல பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றில் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு குறித்த நபர் சிகிச்சையளித்து வந்துள்ள அதேவேளை இவர் கம்பஹா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment