கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 October 2020

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

 கட்டுநாயக்க விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


சிலாபத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணொருவரே நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் ஐ.டி.எச்சுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, சீதுவ பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment