தன்னை மீண்டும் கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்கக் கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை நிராகரித்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி கைது செய்யப்பட்டிருந்த ரியாஜ், செப்டம்பர் 20 விடுதலை செய்யப்பட்டிருந்ததோடு அவருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லையென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எனினும், ரியாஜின் விடுதலை அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கைதாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் தற்போது ரிசாத் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பின்னணியிலேயே ரியாஜ் தரப்பு கைதைத் தவிர்க்க மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment