பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 October 2020

பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா

 


பேலியகொட மத்திய மீன் சந்தையில் தொழில் புரியும் 100 பேரளவில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் 49 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


மினுவங்கொடயில் இம்மாதம் 3ம் திகதி இரவு பெண்ணொருவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.


கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்ற இடம் என்ற அடிப்படையில் இங்கு நேற்று முன் தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment