பிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷ், துப்பாக்கிச் சண்டையில் 'இடையில்' சிக்கி உயிரிழந்ததாக பொலிசார் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், "தைரியமுள்ள - ஆண்மையுள்ள பொலிஸ்காரர்கள் இணைந்து உன்னை வழியனுப்பி வைத்து விட்டார்கள்" என்று போய் உன் நண்பர்களிடம் சொல் என்று மதுஷ் மரணம் தொடர்பில் ஆவேச கருத்து வெளியிட்டுள்ளார் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்க ஜீவ.
முன்னர் ஒரு தடவை தன்னால் இலக்கு வைக்கப்பட்டிருந்த மதுஷ், அமைச்சர் பௌசி அங்கு இருந்ததனால் உயிர் தப்பியதாகவும் பாய்வத்தை மிஹ்லாரின் மகன் திருமணத்தில் மதுஷ் இம்ரானோடு வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது நண்பர்களை மதுஷ் எதிர்பார்க்காத வகையில் கொன்றதாகவும் அதன் பின் தப்பி வாழ்ந்த நபர் தற்போது 'ஆண்மையுள்ள' பொலிசாரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் ரங்க ஜீவ ஆவேச கருத்து வெளியிட்டுள்ளமையும், போதைப் பொருள் மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மதுஷ் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் இரு பொலிசாரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment