ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை அரசாங்கமே பாதுகாப்பதாக தெரிவிக்கிறார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச.
அரசின் முக்கிய உறுப்பினர்களின் உதவியுடன் அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்பது பற்றி தம்மால் திடமாகக் கூற முடியவில்லையாயினும், அதனை மேலிடத்தில் நேரடியாகக் கேட்டால் பதில் கிடைக்கலாம் என செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் விளக்கமளித்துள்ளார் விஜேதாச.
எவ்வாறாயினும் சகோதரர்கள் இருவருக்கும் அரசின் பூரண பாதுகாப்பு இருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment