தெஹிவளை: மீன் விற்பனை செய்யும் பெண்ணுக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday, 16 October 2020

தெஹிவளை: மீன் விற்பனை செய்யும் பெண்ணுக்கு கொரோனா

 


தெஹிவளை, கரகம்பிட்டிய வாராந்த சந்தையில் மீன் விற்பனை செய்து வரும் 63 வயது பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த பெண்ணிடம் மீன் கொள்வனவு செய்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் தெஹிவளையில் இயங்கும் தனியார் பற் சிகிச்சை நிறுவனம் ஒன்றுக்கும் சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பெண் வாழ்ந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியிலில் 34 பேர் தனிமைப்பட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மேலும் 22 பேர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment