ரிசாத் தொடர்பில் சஜித் - ஹக்கீமிடம் விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday 16 October 2020

ரிசாத் தொடர்பில் சஜித் - ஹக்கீமிடம் விசாரணை

 


ஆறு விசேட பொலிஸ் குழுக்களைக் களமிறக்கித் தேடியும் தம்மால் கண்டு பிடிக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தொடர்பில் சமகி ஜனபல வேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர்.


நேற்றைய தினம் ரிசாத் பதியுதீனின் மனைவியிடமும் விசாரணை நடாத்தி வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் அவரைத் தேடி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, கைதைத் தவிர்ப்பதற்கு ரிசாத் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment