பந்தாடப்படும் ஜாலிய: மீண்டும் இடமாற்றம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 October 2020

பந்தாடப்படும் ஜாலிய: மீண்டும் இடமாற்றம்!

 


ரியாஜ் பதியுதீன் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளராக இருந்து, உதவியாளராக மாற்றம் பெற்று வடபகுதிக்குச் சென்ற ஜாலிய சேனாரத்னவை மீண்டும் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதில் பொலிஸ் மா அதிபரே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள அதேவேளை பொலிஸ் ஆணைக்குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பிரிவுக்கு அவரை மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்ற அதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சிரேஷ்ட உயரதிகாரிகள் 14 பேர் நஷ்ட ஈடு கோரியுள்ள சர்ச்சையொன்றும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொலிஸ் மா அதிபர் பூஜிதவும் பல்வேறு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment