20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி சர்வாதிகாரியாக மாற முனைவது மக்கள் ஆணைக்கு முரணானது என ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் விஜேதாச ராஜபக்ச.
மீண்டும் 9 பக்க கடிதம் ஒன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விஜேதாச, அதில் இது குறித்து விளக்கியுள்ளதுடன் அவ்வாறு சர்வாதிகாரத்தைக் கைப்பற்ற முனைவது ஜனநாயக விரோத செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவது அமைச்சரவை நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் அண்மைக்காலமாக விஜேதாச ராஜபக்ச ஜனாதிபதிக்கு பகிரங்கமாக கடிதங்கள் எழுதி வரும் அதேவேளை உத்தேச 20ம் திருத்தச் சட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment