சஹ்ரான் தற்கொலைதாரியென 'இலங்கைக்கு' தெரியாது: ஹேமசிறி - sonakar.com

Post Top Ad

Friday, 2 October 2020

சஹ்ரான் தற்கொலைதாரியென 'இலங்கைக்கு' தெரியாது: ஹேமசிறி

 


ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக, சஹ்ரான் என்ற நபர் தீவிரவாத போக்கைக் கொண்டிருப்பதாக மாத்திரமே அறியப்பட்டிருந்ததாகவும் தற்கொலைத் தாக்குதல் நடாத்தக்கூடிய நபர் என அறியப்பட்டிருக்கவில்லையெனவும்  தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ.


வெளிநாட்டு உளவுத்தகவல்கள் கிடைக்கும் வரை அவ்வாறு ஒரு எண்ணமே இலங்கை புலனாய்வுத்துறையிடம் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் உட்பட நல்லாட்சி அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..


இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் 'உடனடியாக' மேற்கொள்ளப்பட்டத் திட்டமாகத் தெரியவில்லையெனவும் நீண்டகால செயற்பாட்டின் விளைவாகவே தாம் கருதுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment