திவுலபிட்டிய பெண்ணுக்கு முன்னரே அங்கு 'கொரோனா' - sonakar.com

Post Top Ad

Wednesday 7 October 2020

திவுலபிட்டிய பெண்ணுக்கு முன்னரே அங்கு 'கொரோனா'

 


பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவுலபிட்டியவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஒக்டோபர் 3ம் திகதி கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து பல இடங்களில் ஊரடங்கு மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் நடாத்தப்பட்டும் 800க்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும்,  திவுலபிட்டிய பெண்ணுக்கு முன்பாகவே அங்கு கொரோனா பாதிப்பு இருந்திருப்பதாக விளக்கமளித்துள்ளது சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு.


அன்னளவாக செப்டம்பர் 20ம் திகதிக்கு முன்பிருந்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இருந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment