சஜித் பிரேமதாச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியை வழங்கி உதவியதன் பின்னணியில் தேசியப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட டயானா கமகே அரசின் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
156:65 என்ற அடிப்படையில் குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கான 'பேச்சுவார்த்தைகள்' நேற்றிரவே நிறைவு பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் டயானா கமகே சஜித் பிரேமதாசவை மீறி அரசுக்கு ஆதரவளித்துள்ளமையும் அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment