பிரன்டிக்ஸ் நிறுவனத்துக்குள் கொரோனா பரவுவதற்கு கொரோனா வைரசுடன் வந்த இந்திய பிரஜையொருவரே காரணம் என பரவி வரும் வதந்தியை நிராகரித்துள்ளது குறித்த நிறுவனம்.
இந்தியாவிலிருந்தோ, வேறு எந்த வெளிநாட்டிலிருந்துமோ வந்து தமது நிறுவன நடவடிக்கைகளில் யாரும் தலையிடுவதில்லையென விளக்கியுள்ளதோடு அண்மையில் இந்தியாவிலிருந்து மூன்று பிரத்யேக விமானங்களில் தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அழைத்து வரப்பட்டதாகவும் அவர்களும் அரசின் வழிகாட்டலுக்கமைவாக விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்றியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment