மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (25) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகயாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட மீன் வியாபாரிகள் பதினொரு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஏனைய மக்களை பாதுகாக்க வேண்டியே இத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த பகுதியில் திறந்திருந்த வர்த்தக நிலையங்களை பாதுகாப்புப் படையினர் மூடியதுடன், அநாவசியமாக நடமாடும் பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அத்தோடு, குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர்களுக்கும் பாதுகாப்புப் படையினர்களுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரதேச பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர்கள் கடமைகளில் ஈடுபற்று வருவதோடு வீதி ரோந்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வாகன ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment