ஒவ்வொரு தனி நபருக்கும் தமது கருத்துச் சுதந்திரம் இருக்கின்ற போதிலும் அரசியல் கட்சியெனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட கூட்டு முடிவை மீறுவது சட்ட விரோதம் என சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாச, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த தமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார்.
அவருக்கு கட்சியை வழங்கிய டயானா கமகே மற்றும் இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் 20க்கு ஆதரவளித்திருந்த நிலையிலேயே அச்சட்மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனோ கணேசன் தமது கூட்டணி உறுப்பினருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் இரு முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மழுப்பி வருகின்ற அதேவேளை, இவர்களது முடிவின்படியே தாம் வாக்களித்ததாக கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment