ஊரடங்கு பிரதேசங்களில் தற்காலிகமாக கடைகள் திறப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 9 October 2020

ஊரடங்கு பிரதேசங்களில் தற்காலிகமாக கடைகள் திறப்பு

 கொரோனா பரவலின் பின்னணியில் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில், மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நிமித்தம் சதொச, கூட்டுறவு சங்கக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுள்ளது.


நடந்து செல்லக் கூடிய தூரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்லும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, அத்தியாவசிய பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்யும் இடங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த கொரோனா காலங்களில் பொருட்கள் ஏகத்துக்கும் விலையுயர்த்தி விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்திருந்தனர். இம்முறை குறிப்பிட்ட சில இடங்களிலேயே ஊரடங்கு அமுலில் உள்ளதோடு வார இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு என்ற வதந்தியையும் இராணுவத் தளபதி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment