ஹாபிஸ் நசீர் விலை போய் விட்டார்: ஹர்ஷ சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 22 October 2020

ஹாபிஸ் நசீர் விலை போய் விட்டார்: ஹர்ஷ சந்தேகம்!20ம் திருத்தச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நெருங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் விலை போய்விட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் ஹர்ஷ டி சில்வா.


எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கும் அவர் தனக்கு வழங்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் அரசைப் புகழ்ந்து பேசி 20க்கான ஆதரவை வெளியிட்டிருப்பதாக சந்தேகிக்கும் ஹர்ஷ, அரசாங்கம் தமக்கத் தேவையான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கியிருப்பதற்கான சமிக்ஞை என வர்ணித்துள்ளார்.


தனது கேள்வியை நேரடியாக ஜனாதிபதியோ நோக்கி ஹர்ஷ முன் வைத்துள்ள அதேவேளை கட்சித்தாவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment