ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 October 2020

ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா!

 


நேற்றைய தினம் 194 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 42 பேர் ஒரே விடுதியில் தங்கியிருந்த நபர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சீதுவ பகுதியில் இயங்கி வரும் விடுதியொன்றிலிருந்தே இவ்வாறு 42 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தொற்றாளர்களுள் ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களிலிருந்து பலர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

மினுவங்கொடயில் ஆரம்பித்த இச்சுற்றில் கண்டறியப்பட்டுள்ள பலர் தொழில் நிமித்தம் வெளியூர்களில் தங்கியருக்கின்ற போதிலும் அவர்களது நிரந்தர முகவரிகள் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பல்வேறு இடங்களில் தொற்றாளர்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment