நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரையும் அவரது கணக்காளரையும் கிருலபனையில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுமார் 9.5 மில்லியன் ரூபா பொது நிதி முறைகேட்டில் அழகரத்னம் மனோரஞ்சன் என அறியப்படும் குறித்த கணக்காளருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விரைவில் ரிசாத் பதியுதீனை விரைவில் கைது செய்வோம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment