அரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்தை தமது தரப்பு முற்றாக எதிர்க்கவில்லையென தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.
வவுனியா, மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த அவர் அங்கு விஜயம் செய்திருந்த சமல் ராஜபக்சவுடன் பரஸ்பரம் உரையாடிக் கொண்டிருந்த அதேவேளை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் போற்றிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், நிகழ்வு முடிந்து கருத்துரைத்த ரிசாத் பதியுதீன் தமது கட்சி 20ஐ முழுமையாக நிராகரிக்கவில்லையெனவும் அதில் சில விடயங்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன் தாம் தனிக்கட்சியென வலியுறுத்தி கூறியுள்ளமையும், ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் பின்னணியில் கைது செய்யப்பட்ட அவரது சகோதரன் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment