
அண்மையில் மட்டு மாவட்டம், பன்குடாவெளி பகுதியில் அரச அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்து, தாக்கி அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி, சர்ச்சைப் பேர்வழி அம்பிட்டியே சுமன தேரரை நேற்றைய தினம் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.
வழக்கின் விசாரணை நவம்பர் 27ம் திகதி தொடரவுள்ள நிலையில், தாம் அதிகாரிகளைத் தாக்கியது போன்று சித்தரிக்கப்படுவதாகவும் அதில் உண்மையில்லையெனவும் விளக்கமளிக்கின்ற சுமன தேரர், ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய பணியையே தான் செய்ததாகவும் தன் மீது தவறில்லையெனவும் தெரிவிக்கிறார்.
தொல்பொருட் திணைக்களம் தம் கடமையைச் செய்யத் தவறுவதையே தான் சுட்டிக்காட்டுவதாகவும் அதனை தமக்கெதிரான பிரச்சாரமாக தமிழ் - சமூகங்கள் முன்னெடுப்பதாகவும் ஆளுந்தரப்பும் இதில் தமக்கு நியாயத்தைப் பெற்றுத்தரத் தவறுதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை நேரடியாகத் தட்டிக் கேட்கச் செல்லும் ஜனாதிபதி தமது பிராந்தியத்தில் இடம்பெறும் பௌத்த விரோத நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாதிருப்பதாகவும் சுமன தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment