சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01) வியாழக்கிழமை சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை பிரிவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த முதியோர்கள் இதில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடியைச் சேர்ந்த 104 வயதுடைய பெண்மணி ஒருவர் உட்பட அறுபது முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், உப தவிசாளர் யூ.எல்.அஹமட் மற்றும் உறுப்பினர்கள், நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment