பூசா முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த பாதாள உலக பேர்வழி கஞ்சிபானை இம்ரானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வழக்குகளுக்கு சென்று வரும் போது தம்மை மேலதிக பரிசோதனைக்குட்படுத்துவது மற்றும் தம்மை சந்திக்க வரும் வழக்கறிஞர்களையும் பரிசோனை செய்வது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி குறித்த நபர் உட்பட பலர் பூசா முகாமில் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் இம்ரானுக்கு நெஞ்சு வலி வந்ததாகக் கூறி கடற்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment