மரண தண்டனைக் கைதியான சொக்கா மல்லியென அறியப்படும் பிறேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய அனுமதித்ததன் ஊடாக சபாநாயகர் தவறிழைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அரசியலமைப்பில் 89 மற்றும் 91ம் விதிகள் இதனூடாக மீறப்பட்டிருப்பதாகவும் பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்த காலத்தில் குட்டிமணியென அறியப்பட்ட செல்வராஜ் யோகசந்திரனை இதனடிப்படையில் அனுமதிக்கவிவ்லையெனவும் அவ்வேளையில் அவரும் மேன்முறையீடு செய்திருந்ததாகவும் சஜித் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் சபாநாயகர் யாப்பா அரசியலமைப்பை மீறியுள்ளதாக சஜித் பிரேமதாச சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment