மலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வளிப்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
ஆறுமுகம் தொண்டமானிற்கான இரங்கலுரையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இறப்பதற்கு சில மணி நேரம் முன்பாகவும் தன்னைச் சந்தித்து தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளையே அவர் தன்னிடம் பேசியதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
தனது தந்தையின் நல்ல நண்பனான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆறுமுகம் தொண்டமான் ஒரு போதும் பிரிவினையை விரும்பியதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment