ஹ'தோட்டை: எரியூட்டப்பட்ட ஜனாஸா; கொரோனா பட்டியலில் இல்லை! - sonakar.com

Post Top Ad

Monday, 14 September 2020

ஹ'தோட்டை: எரியூட்டப்பட்ட ஜனாஸா; கொரோனா பட்டியலில் இல்லை!


ஹம்பாந்தோட்டையில் ஜனாஸா ஒன்று வலுக்கட்டாயமாக எரியூட்டப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த, இஸ்லாத்தின் பால் திரும்பிய சகோதரர் ஒருவரது ஜனாஸாவே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. 


நாடு திரும்பியிருந்த அவருக்கு விமான நிலைய பரிசோதனையின் போது கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ஹம்பாந்தோட்டையில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்தவர் பின் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அங்கு கொரோனா தொற்றிருப்பதாக எந்த வித உறுதிப்படுத்தலும் வழங்கப்படாத நிலையில் நேற்று முன் தினம் ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளதாக சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.


குறித்த சகோதரருக்கான ஜனாஸா தொழுகை கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் பள்ளி நிர்வாக சபை முக்கிய உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய தோழரே இவ்வாறு மரணித்து எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்னாராது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக! 

1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment