முர்ஷித் மௌலவிக்கு எதிராக போலிச் செய்தி: அசாத்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 September 2020

முர்ஷித் மௌலவிக்கு எதிராக போலிச் செய்தி: அசாத்!

https://www.photojoiner.net/image/6YZMZQ0D

அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் எம். முஸ்ஷித் அவர்களுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட தகவலுடன் படம் ஒன்று உலவுவதாக முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.


தனது படத்தை இணைத்து தரக்குறைவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த படம் தொடர்பில் பொலிசில் முறையிட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து அவரிடம் சோனகர்.கொம் வினவிய போது விளக்கமளித்திருந்தார்.


இது குறித்த மறுப்பைத் தனது உத்தியோகபூர்வ முகநூப் பக்கத்திலும் வெளியிட்டிருப்பதாகவும் வேண்டுமென்றே விசமத்தனமான செயல்களில் சமூகத்தார் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Image may contain: 1 person, text that says "முர்ஷித் முளப்பர் போன்ற முட்டாள்களையே ஜம்மியதுல் உலமா பதவியில் வைத்துள்ளது அகில இலங்கை உலமாவின் செயலரளர் முட்டாள் தனமா ளையும் தலைகுனிய டன்டியாக அவரை ஜம்மியது பதவி விலக்க வேண்டும் அவரை கைது செய்து விசாரணை செய்யுமாறு காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி"

1 comment:

Suhood MIY said...

வாழ்விற்கும் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆயினும் இறந்த நிமிடத்திலிருந்து அடக்கம் செய்யப்படும் வரையிலுமுள்ள அச்சிறு காலப்பகுதியில் அவர எவ்வாறு உலகில் வாழ்ந்தார் என்பது அவரது அங்க அடையாளங்களை வைத்தே விரிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். புத்தியுள்ளவரகளுக்கு இது ஒரு பாலபாடம்.

Post a Comment