பஹ்ரைனிலிருந்து அண்மையில் நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலுமியாகப் பணியாற்றிய குறித்த நபர், நாடு திரும்பியிருந்த போது அவருக்கு கொரோனா தொற்றிருக்கவில்லையெனவும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.
செப்டம்பர் 9ம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment