தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் ஆயுதம் வழங்கியதாக சாட்சியம் - sonakar.com

Post Top Ad

Monday, 14 September 2020

தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் ஆயுதம் வழங்கியதாக சாட்சியம்

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களுக்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆயுதங்கள் வழங்கியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பிராந்திய டி.ஐ.ஜியாகப் பணியாற்றிய எட்சன் குணசேகரவே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அப்பகுதிகளிலுள்ள மக்கள் ஹிஸ்புல்லாஹ் போன்ற அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொள்ளவும் அச்சப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


பிராந்தியத்தில் அடிப்படைவாதிகளை கைது செய்வதில் ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், ஹாபிஸ் நசீர், ரிசாத் பதியுதீன் உட்பட்ட அரசியல்வாதிகளின் தடங்கல் இருந்ததாகவும் குறித்த நபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment