முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட மேலும் இருவருக்கு எதிரான காணி மோசடி வழக்கின் விசாரணைக்கு ஒக்டோபர் 22 தேதி குறிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் பகுதியில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை மோசடி செய்து விற்பனை செய்ததாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கைகள் தயாராக இல்லையென பொலிஸ் தரப்பு இன்றைய தினம் தெரிவித்ததன் பின்னணியில் ஒக்டோபர் 22 தேதி குறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment