ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் உயிரிழந்த நிலையில் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 10 September 2020

ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் உயிரிழந்த நிலையில் மீட்பு

த ஐலன்ட் ஆங்கில பத்திரிகையில் கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் தனது வீட்டில் உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வீட்டில் தனிமையில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக பணிக்குச் செல்லாத நிலையில் அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்ததன் பின்னணியில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


பொலிசார் இது தொடர்பில் விசாரிக்கின்ற அதேவேளை அவரது இறப்பில் சந்தேகம் எதுவும் இல்லையென சக ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவிக்கின்றமையும் அவர் சில நாட்களுக்கு முன்பாகவே உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment