2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகின்றோம்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment