20ம் திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் சமூக மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஒரே நாளில் பரிந்துரைகளை கையளிக்கவுள்ளது.
அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில், அமைச்சர்கள் அலி சப்ரி, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால டிசில்வா, ராஜாங்க அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, வியாழேந்தின் மற்றும் டிலான் பெரேரா, பிரேம்நாத் தொலவத்த ஆகியோர் உள்ளடங்கலான இக்குழு ஞாயிறு மாலை நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கூடியதாக தெரிவிக்கப்படும் குழு இன்று பரிந்துரைகளைக் கையளிக்கவுள்ளதுடன் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை முன் வைத்து அங்கீகாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment