பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்ட மாடறுப்பு தடை விவகாரத்தை இன்னும் ஒரு மாத காலத்துக்குத் தள்ளி வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
வேறு தரப்புகளோடும் பேச்சுவார்த்தை நடாத்தும் நிமித்தம் இவ்வாறு இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமூக மட்டத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ள இவ்விவகாரத்துக்கு சிங்கள சமூகத்திலிருந்தும் பாரிய அளவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதுடன் அரசின் இத்திட்டம் கேலிக்கூத்தென விபரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment