குதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, மனோகர டி சில்வா, காமினி மாரப்பன, சஞ்சீவ ஜயவர்தன, சமந்த ரத்வதத்த ஆகியோருடன் பேராரிசியர்கள் ஜி. பீரிஸ், வசந்த செனவிரத்ன, நதீமா கமுர்தீன் ஆகியோரும் கலாநிதி ஏ. சர்வேஷ்வரனும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை விட தமக்குக் கிடைத்திருக்கும் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதே சிறந்த வழியென பெரமுன தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment