அங்கொட லொக்காவின் குழுவைச் சேர்ந்த பாதாள உலக பேர்வழி சொல்டா என அறியப்படும் அசித ஹேமதிலக பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றிவளைக்கப்பட்ட நபர் பொலிசாரை நோக்கி கைக்குண்டை எறிய முற்பட்ட வேளையில் சுடப்பட்டதாக பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
அங்கொட லொக்கா இந்தியாவில் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த நபரின் கைரேகே மற்றும் டி.என்.ஏ மாதிரிகளை இலங்கை அரசு இந்தியாவுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment