28 அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்களுடன் தயாராகும் அரசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 August 2020

28 அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்களுடன் தயாராகும் அரசு!

புதிய அரசின் அமைச்சரவை நியமனம் நாளை எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இம்முறை 28 கபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்பின்னணியில் 28 பிரதியமைச்சர்களும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை வியத்மக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சமாளிக்கும் பதவிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பெரும்பாலும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என சமூக மட்டத்தில் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment