இலங்கையில் திருமண வயது 18 என நிர்ணயிப்பதற்கான தனி நபர் பிரேரணையை கையளித்துள்ளார் பெரமுனவின் பிரமித பண்டார தென்னக் கோன்.
இவ் வயது நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் இணக்கப்பாட்டுக்கு வர இயலாது காணப்படுகின்ற போதிலும் இம்மாற்றம் நிகழ்ந்தேயாகும் என அண்மையில் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
2009ல் மஹிந்த ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க 19 பேர் கொண்ட விசேட குழுவொன்றை நீதிபதி சலீம் மார்சுப் தலைமையில் அப்போதைய சட்ட ஒழுங்கு அமைச்சர் மிலிந்த மொரகொட நியமித்திருந்தார். எனினும், அக்குழு இரு வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று கருத்து மோதலில் ஈடுபட்டு வந்ததேயன்றி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இலங்கையில் சட்டபூர்வமான திருமணத்துக்கான குறைந்த வயது 18 என சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோரி இத்தனி நபர் பிரேரணை நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment