2019 மார்ச் மாதம், நியுசிலாந்து க்றைஸ்ட்சேர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து அங்கிருந்த அப்பாவி மனிதர்களை சராமரியாக சுட்டுக் கொன்ற பயங்கரவாதி பிரன்டன் டரன்ட்டுக்கு ஆயுள் முழுவதுமான சிறைத் தண்டனை வழங்கியுள்ளது நியுசிலாந்து நீதிமன்றம்.
இத்தண்டனையின் பின்னணியில் குறித்த நபர் பரோலில் கூட வெளி வர முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதி பிரன்டன் உயிரோடு இருக்கும் வரை சிறையிலேயே வாழ்க்கை கழியும் என தெரிவிக்கப்படுகிறது.
51 பேரைக் கொன்ற குறித்த நபர், தான் குறிப்பிட்ட சில வருடங்களில் சிறைத்தண்டனை முடிந்து வந்து விடுவேன் என்று கணக்கிட்டே தாக்குதலை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நியுசிலாந்தில் முதன் முறையாக இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment