
தேர்தலில் வெற்றி பெற்றால் தமக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் கி.மாகாண முதல்வர் பிள்ளையான்.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பெரமுன ஊடாக கிழக்கில் தேர்தலில் போட்டியிடும் நிலையில் வெற்றி பெற்றால் அமைச்சுப் பதவி தருவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிணையில் விடுதலை பெற்றாலன்றி அப்பதவி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பிள்ளையானுக்கு பிணை கிடைக்காமலும் விடும் என சந்தேகம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment