ரணில் - சஜித் பிளவு திட்டமிட்ட நாடகம்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Friday 31 July 2020

ரணில் - சஜித் பிளவு திட்டமிட்ட நாடகம்: கம்மன்பில

https://www.photojoiner.net/image/xCOTnb8W

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் பிளவு ஒரு திட்டமிட்ட நாடகம் என்கிறார் உதய கம்மன்பில.

சமகி ஜன பல வேகய ஊடாக தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி சிலரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. ஆனாலும் சஜித் உட்பட முக்கிய நபர்களின் பெயர்கள் அதில் இல்லை. இரு தரப்பும் திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்துகிறார்கள், தேர்தலின் பின் கை கோர்ப்பார்கள் என கம்மன்பில மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, முதற்கட்ட பட்டியலே தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் அடுத்த கட்ட விசாரணைகள் நடந்து முடிந்ததும் அடுத்த பட்டியல் வெளியாகும் என அண்மையில் அகில விராஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment