பூசா முகாமில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளின் தூதர்களாக செயற்பட்டு வந்த சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 15 பேர் இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதோடு, குறித்த நபர்களே வெளியில் இருக்கும் கைதிகளின் சகாக்களுக்கு தகவல் கொண்டு செல்வதோடு அங்கிருந்து தகவல்களைப் பெற்று வந்து தெரிவித்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளிகள் சிறைப்படுத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதோடு பெரும்பாலானவை சிறைச்சாலைகளிலிருந்தே வழி நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment