ஐ.தே.க தலைமைக்கு ரவி - நவின் போட்டி! - sonakar.com

Post Top Ad

Monday 27 July 2020

ஐ.தே.க தலைமைக்கு ரவி - நவின் போட்டி!

https://www.photojoiner.net/image/sPz3hYgK

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்குத் தான் தயாராக இருப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்ற அதேவேளை, தாம் கட்சியைப் பொறுப்பேற்பது உறுதியென தெரிவித்துள்ளார் நவின் திசாநாயக்க.

சஜித் பிரேமதாச தனிக்கட்சி துவங்கியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை பற்றிய பேச்சுக்களும் ஆரம்பித்துள்ளன.

நவின் திசாநாயக்க ரணில் விக்கிரமசிங்க வீற்றிருந்த மேடையிலேயே தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது ரவி கருணாநாயக்கவும் தமது தயார் நிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment