சஹ்ரானைப் பற்றி பாதுகாப்பு கவுன்சிலுக்கு 'எல்லாம்' தெரியும்! - sonakar.com

Post Top Ad

Tuesday 28 July 2020

சஹ்ரானைப் பற்றி பாதுகாப்பு கவுன்சிலுக்கு 'எல்லாம்' தெரியும்!


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானினால் உருவான ஆபத்துகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவே இவ்வாறு சாட்சியமளித்துள்ளதுடன் 2017ல் காத்தான்குடியில் இடம்பெற்ற குழு மோதலின் பின்னர், சஹ்ரான் தீவிரப் போக்கில் எல்லை மீறி விட்டதாக தான் அறிக்கை வழங்கியிருந்ததாகவும் தெரிவிததுள்ளார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரங்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பிருப்பதாகவும் தான் 'அப்போதே' பாதுகாப்பு கவுன்சிலை எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment