விசாரணைகள் எல்லாம் பழி வாங்கல்: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Monday, 27 July 2020

விசாரணைகள் எல்லாம் பழி வாங்கல்: ரிசாத்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இப்போதிருக்கும் அதே பொலிஸ்மா அதிபரே  “ரிஷாட் பதியுதீனுக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடனோ, வேறு எந்த பயங்கரவாத சம்பவத்துடனோ, எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது” என  எழுத்துமூலம் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு விசாரணை நடப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.


No comments:

Post a Comment