கல்முனை - சம்மாந்துறை பகுதிகளில் நீண்ட காலமாக ரகசியமாக சட்டவிரோத சிகரட்டுக்களை கடத்தி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியின் ஊடாக தினமும் சட்டவிரோதமாக மோட்டார் சைக்களிள் ஒன்றில் சிகரட் பக்கெட்டுக்கள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் மற்றும் சார்ஜன்ட் றவூப் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் சட்டவிரோத சிக்கிரட் பக்கட்டுக்களுடன் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதானவர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் சுமார் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 400 சட்டவிரோத சிக்கரட் பக்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் சிகரட் பக்கட்டுக்கள் நாளை (28) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபர் கல்முனை பிராந்தியத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரை விநியோகத்திலும் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment