முஸ்லிம்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்: ரதனே புதுக் கதை! - sonakar.com

Post Top Ad

Wednesday 8 July 2020

முஸ்லிம்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்: ரதனே புதுக் கதை!


இன்னும் ஒரு வார காலத்திற்குள் காதி நீதிமன்றங்கள், மதரசாக்கள் மற்றும் புர்கா தடை அறிவிக்கப்படவில்லையெனின் நாட்டில் முஸ்லிம்களினால் தயாரிக்கப்படும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன.

ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் தனக்கான எதிர்காலம் இல்லையெனக் கருதி மஹிந்த அணியில் இணைந்து கொண்ட அத்துராலியே ரதன அண்மைக்காலமாக கடுமையான முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தினை முன் வைத்து அரசியல் இலாபம் தேடி வருகிறார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை குறி வைத்துக் கடும் விமர்சனங்களை முன் வைப்பதோடு முஸ்லிம் சமூகத்தின் செயற்பாட்டுகளுக்கு ஜம்மியத்துல் உலமாவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து தனித்துவ சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் 'பேசி' வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

Sano said...

he is one of the terror monk, government should arrest him for his harassment against the minority. at the same time we should have to file the case against him in the human rights commission of UN to declare him as a Buddhist terrorist monk.

Abdul said...

இவண்ட இந்த கருத்தை வைத்தே அரசாங்கம் இவனை கைது செய்து சிறையில் அடைக்கலாம் ஏனனில் பேச்சில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராகவும் மற்றும் துவேஷ கருத்துகளை முன் வைப்பதும் ஆகும்.
மேற்கு உலகில் இவ்வாறு சிறுபான்மையினரை தாக்கும் கருத்துகளை யாரு சரி முன் வைத்தால் அரசாங்கமே கைது செய்து அதட்கான தண்டனைகளை வழங்குவார்கள்.

Anonymous said...

His movement is so sarcastic when it comes to politics and targeting Muslims in order to fulfill their seats on forthcoming elections. So our Muslim leaders have to come forward and speak up on behalf of Sri lankan Muslims and take necessary action against this Monk the one who doesn't know whats Karunaawa and what is Maithriya in Buddhism. Every community has their own freedom and no one can intervene. There are so many wine stores, casino centers and prostitute spas and not even a single politician speak against this shits. So request this monk to shutup and mind your own business.

Post a Comment